சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை
சென்னை: சென்னையில் காலை முதல் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென வானம் மேகமூட்டமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணியளவில் கனமழை கொட்டியது.
இதையும் படிக்க.. சனிக்கிழமைகளில் விடுமுறை: பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
இது மட்டுமல்லாமல் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
பூவிருந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை கொட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வானிலை சட்டென மாறி மேகமூட்டமாகக் காணப்படுகிறது.
இதையும் படிக்க.. சென்னையை சுட்டெரிக்கும் சூரியன்: காரணம் இருக்கிறதாம்
மேலும், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, போரூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.
Source: https://www.dinamani.com/tamilnadu/2022/may/25/heavy-rain-in-the-suburbs-of-chennai-3850506.html