Live Updates : “சென்னை-கனடா, மதுரை-மலேசியா, நாமக்கல்-நியூயார்க் வரை தமிழ் கலாசாரம் இருக்கிறது!” – மோடி – Vikatan

சென்னைச் செய்திகள்

“தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும்!” – பிரதமர் மோடி

பிரதமர் மோடி, “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்தது. மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதென்பது சிறப்பான ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்தவர்களாக விளங்குகிறார்கள். தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழ் மொழி பழைமையானது, சர்வதேச அளவில் புகழ்பெற்றது. சென்னை-கனடா, மதுரை-மலேசியா, நாமக்கல்-நியூயார்க், சேலம்-தென் ஆப்பிரிக்கா வரை தமிழ் கலாசாரம் இருக்கிறது. கான் திரைப்பட விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையில் எல்.முருகன் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார்.

பெங்களூரு-சென்னை விரைவு சாலைத் திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. மதுரை-தேனி அகல ரயில்பாதை திட்டம் விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். எதிர்காலத் தேவையை நோக்கமாகக்கொண்டு நவீன திட்டங்கள் தீட்டப்படுகின்றன. உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஏழைகளின் நலனை உறுதிசெய்வதே நோக்கம். தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் என்னுடைய தொகுதியான வாரணாசியில் இருக்கிறது. அங்கு பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/live-updates-on-prime-minister-modi-chennai-visit-and-the-government-event