சாலை அமைப்பதில் விதிமீறல்: சென்னை மாநகராட்சி பொறியாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சாலை அமைப்பதில் விதி மீறல் புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி செயற்பொறியாளரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

‘சென்னை மாநகராட்சி 2வது மண்டலம் 16 வாட்டில், சடையன் குப்பம் பர்மா நகர் பகுதியில் உள்ள 4,7 மற்றும் 14 வது தெருக்களில் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலைகளை அமைக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிகளை மீறி சென்னை மாநகராட்சி பொறியாளர் இந்த சாலை பணிகளுக்கு அனுதி அளித்துள்ளார்.

‘இது குறித்து அந்தப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, 2 வது மண்டல செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/805561-violation-of-rules-in-road-construction-change-to-chennai-corporation-engineer-waiting-list.html