தமிழ் நிலையானது! சென்னை டூ கனடா, மதுரை டூ மலேசியா, நாமக்கல் டூ நியூயார்க் – எதுகையில் புகழ்ந்த மோடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

image

Chennai-ல் Bharathiyar-ன் வரிகளை குறிப்பிட்ட PM Modi | Modi Speech #Politics

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.

பிரதமர் முன் ”ஒன்றிய அரசு” என பலமுறை சொன்ன ஸ்டாலின்.. சொன்னபோதெல்லாம் அரங்கத்தில் ஆரவாரம், கோஷம்பிரதமர் முன் ”ஒன்றிய அரசு” என பலமுறை சொன்ன ஸ்டாலின்.. சொன்னபோதெல்லாம் அரங்கத்தில் ஆரவாரம், கோஷம்

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பிரதமர் மோடி

சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக வரவேற்பு

பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காவி உடை அணிந்த கலைஞர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகளி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்றனர்.

தமிழை புகழ்ந்த பிரதமர் மோடி

இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இதில் தமிழ்நாட்டுக்கான 6 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். “தமிழ்நாடு வருவது எப்போது மகிழ்ச்சிக்கு உரியதே. தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது.

தமிழ்நாட்டின் சிறப்பு

சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார். அண்மையில் காது கேளாதோருக்கான குழுவினருக்கு எனது இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். இதுவரை நடந்தபோட்டியில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு. நாம் வென்ற 14 பதக்கங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர்களின் பங்கு இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

English summary
PM Narendra Modi lauds Tamil language and it culture in Chennai event: சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/pm-narendra-modi-lauds-tamil-language-and-its-culture-in-chennai-event-459809.html