சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னை:

சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை(செவ்வாய்கிழமை) மற்றும் ஜுன் 1-ந்தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் ஜுன் 1-ந்தேதிகளில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • சென்டிரல்-திருத்தனி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் ஜுன் 1-ந்தேதிகளில் திருவள்ளூர்-திருத்தனி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • அரக்கோணம்-சென்டிரல் இடையே காலை 10 மணி, 11.10 மணி மற்றும் மதியம் 12 மணி, 1.50 மணிக்கும், திருத்தனி-சென்டிரல் இடையே காலை 10.15 மணி மற்றும் மதியம் 12.35 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை மற்றும் ஜுன் 1-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில்களுக்கு பதிலாக கடம்பத்தூர்-சென்டிரல் இடையே காலை 10.25 மணி,11.35 மணி மற்றும் மதியம் 1.25 மணிக்கும், திருவள்ளூர்-சென்டிரல் இடையே காலை 11.10 மணி மற்றும் மதியம் 12.35 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 1.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் மேற்கண்ட தேதிகளில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/change-in-electric-train-services-between-chennai-central-and-arakkonam-710458