விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடி.. போலீஸில் சிக்கிய சென்னை இளைஞர்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து இளைஞர் ஒருவர் மோசடி செய்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரம்யாவுக்கு அவரது உறவினர்கள் மறுமணம் செய்ய மேட்ரிமோனியில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

ஆருத்ரா மோசடி.. 26 இடங்களில் 12 மணி நேரமாக நடந்த அதிரடி ரெய்டு.. 3.41 கோடி பணம், தங்கம் பறிமுதல்!ஆருத்ரா மோசடி.. 26 இடங்களில் 12 மணி நேரமாக நடந்த அதிரடி ரெய்டு.. 3.41 கோடி பணம், தங்கம் பறிமுதல்!

மேட்ரிமோனி

அப்போதுதான் மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் அறிமுகமானார். ரம்யாவிடம் தான் துபாயில் பணியாற்றி வருவதாகவும் தானும் விவாகரத்து பெற்றவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நல்லதொரு வாழ்க்கைத் துணையை தேடி வருகிறேன் என்றும் அரவிந்த் கூறியுள்ளார்.

ரம்யாவும் அரவிந்தும்

இந்த நிலையில் ரம்யாவும் அரவிந்தும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக நேரில் சந்தித்து பேசியுள்ளனர். நேரில் பேசியதும் ரம்யாவுக்கு பிடித்து போனது. இதனால் அரவிந்தை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொண்டனர்.

நெருங்கி பழகிய பெண்

அரவிந்த்தின் குணம் பிடித்து போனதால் அவருடன் நெருங்கி பழகும் அளவுக்கு அரவிந்த் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரம்யாவுக்கு அரவிந்தின் தாய் போன் செய்துள்ளார். அப்போது தாய், தந்தை இல்லாமல் தனிமையில் இருக்கும் நீ நகைகள், பணம் வைத்திருப்பது உனக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அதை என்னிடம் தந்துவிடு, நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

50 சவரன் நகை

இதை நம்பிய ரம்யா, தன்னிடம் இருந்த 50 சவரன் நகை மற்றும் பணத்தை தி நகரில் தங்கியிருந்த அரவிந்திடம் கொடுத்துள்ளார். இவற்றை பெற்றுக் கொண்ட பின்னர் அரவிந்தை ரம்யா தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் அவர் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்த போதுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்தது.

போலீஸில் புகார்

இதையடுத்து அரவிந்த் மீது ரம்யா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அரவிந்தை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் கணவர் இல்லாமல் இருக்கும் பெண்கள, விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி பணம், நகைகளை பெற்று கொண்டு அரவிந்த் தலைமறைவாகிவிடுவது தெரியவந்தது.

அரவிந்த் கைது

இவர் ஏற்கெனவே 4 பெண்களை ஏமாற்றியுள்ளார். துபாயில் வேலை பார்த்த போது அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதும தெரியவந்தது. அரவிந்தை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோல் பெண்கள் ஏமாறக் கூடாது என அறிவுரையையும் வழங்கினர்.

English summary
Youth cheated divorced women in the name of marriage and looted jewel and currency.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-youth-cheated-divorced-women-in-the-name-of-marriage-460089.html