சென்னை: 2022ம் வருடத்திலேயே மிக அதிக வெப்பநிலை சென்னையில் இன்று பதிவானதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்தில் கோடை காலத்திற்கு இடையே ஆங்காங்கே மழை பெய்தது. முக்கியமாக சென்னையிலும், பல்வேறு வட மாவட்டங்களிலும் மழை பெய்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் அசானி புயல் ஆந்திர பிரதேசத்தை தாக்கியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில நாட்கள் மழை பெய்தது.
இது மட்டும் நடந்தால்.. ஓசோன் படலமே அழிந்துவிடும்.. நொடியில் வெப்பநிலை உயரும்.. நாசா கடும் எச்சரிக்கை
அதன்பின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை நீடித்தது. கோடைக்கு இடையிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி மாவட்டங்களில் மே மாதத்தில் பல்வேறு நாட்கள் அங்கும், இங்கும் கனமானது முதல் மிதமானது வரையில் மழை பெய்தது. சென்னையிலும் கோடை வெயிலுக்கு இடையில் சில நாட்கள் மழை பெய்தது.
மீண்டும் வெயில்
ஆனால் இப்போது சென்னையில் மீண்டும் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக வெயில் நாளுக்கு நாள் உயர தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் 36 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. சில பகுதிகளில் 37-38 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று சென்னையில் எதிர்பார்க்காத அளவிற்கு வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டது.
சென்னை
2022ம் வருடத்திலேயே மிக அதிக வெப்பநிலை சென்னையில் இன்று பதிவானதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்விட்டில், சென்னையில் இன்று 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த வருடத்தில் சென்னையில் முதல்முறை இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவாகிறது. இந்த வருடத்தில் இதற்கு முன் இவ்வளவு வெப்பநிலை பதிவாகவில்லை.
தொடரும்
இந்த டிரெண்ட் தொடரும். சூடான் நாட்கள் சென்னையில் தொடரும். சமயங்களில் வெப்பநிலை இதை விட அதிகமாக பதிவாகும் வாய்ப்புகளும் உள்ளன. நுங்கம்பாக்கத்தில் (சென்னை சிட்டி) – 40 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைதான் சூடான இடமாக மீண்டும் பதிவாகி இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-records-hottest-day-in-this-year-trend-may-continue-says-tamil-nadu-weather-man-460579.html