சென்னையில் நாளை மலர் கண்காட்சி – முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது.

மேலும் கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கலைவாணர் அரங்கில் ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் அழகிய மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chief-minister-inaugurates-flower-exhibition-in-chennai-tomorrow-713169