அடையாறு, அண்ணாசாலை மற்றும் ஸ்பென்சர் சந்திப்பு ஆகிய பகுதியில், தற்காலிக போக்குவரத்தை மாற்றம் செய்து, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. நாளை (ஜூன்.4) முதல் பத்து நாட்கள் வரை இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.thanthitv.com/latest-news/chennai-chennai-trafficchange-annasalai-adayar-122813