சென்னை அணியில் ரொமாரியோ – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை, : சென்னையின் எப்சி  அணியில்   தமிழக வீரர்  அலெக்சாண்டார் ரொமாரியோ ஜேசுராஜ்(25) இணைந்து உள்ளார்.இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி  சென்னையின் எப்சி.  சென்னையை முக்கிய இடமாக கொண்டு செயல்படும் இந்த அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறுவது அரிது.  இடம் பெற்றாலும் ஆடும் அணியில் வாய்ப்பு  கிடைப்பது அரிதிலும் அரிது.இந்நிலையில் அடுத்த 9வது ஐஎஸ்எல் தொடருக்காக அணியில் மாற்றங்களை செய்து வருகிறது சென்னை அணி நிர்வாகம். அதன் தொடர்ச்சியாக எப்சி கோவா அணிக்காக சிறப்பாக  விளையாடிய  அலெக்சாண்டர் ரொமாரியோ ஜேசுராஜ்  சென்னை அணியில் இணைந்துள்ளார்

தமிழக வீரரான ரொமாரியோ   சொந்த ஊர் திண்டுக்கல்.   இந்திய யு13 தேசிய அணியில் விளையாடி உள்ளார். கூடவே   17 வயதில் சென்னை பிரீமியர் டிவிஷன் தொடரில்   ஏரோஸ் எப்சி அணிக்காக களம் கண்டுள்ளார்.
ஐ-லீக் தொடரில் 2017ம் ஆண்டு சென்னை சிட்டி எப்சி அணியில் அறிமுகமானார். ஐஎஸ்எல் தொடரில்  கடந்த 2019ம் ஆண்டு முதல் எப்சி கோவா அணிக்காக விளையாடி வந்தார். நடுக்கள ஆட்டக்காரரான அவர் கடந்த ஆண்டு 9 ஆட்டங்களில் விளையாடி 2 கோல்களை அடித்துள்ளார். இந்நிலையில்  சென்னையின் எப்சி அணியுடன் இந்த ஆண்டு முதல் இணைகிறார். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இது குறித்து ரொமாரியோ, ‘சென்னை  அணிக்காக ஒப்பந்தமானதில் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன்.  இது எனது ஊர் அணி என்பதால் கூடுதல் சிறப்பானது.  தமிழக ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது இன்னும் சிறப்பானது.  அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ எ ன்று கூறியுள்ளார்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=770624