சென்னை மலர் கண்காட்சி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Chennai Flower Exhibition – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, முதலாவது சென்னை மலர் கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி இன்றைய தினம் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி 5-ம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த மலர் கண்காட்சியில் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200 வகை மலர்கள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் ரூ.20-ம், பெரியவர்கள் ரூ.50-ம் கட்டணம் செலுத்தி மலர் கண்காட்சியை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புகைப்படத் தொகுப்பைக் காண > சென்னை மலர் கண்காட்சி

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/809195-chennai-flower-exhibition.html