சென்னை தேனாம்பேட்டையில் ரஷிய கலாசார மையத்தில் தீ விபத்து – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள ரஷிய கலாசார மையத்தில் இருந்து நேற்று திடீரென கரும்புகை வெளியேறியது. இதை தொடர்ந்து தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே கலாசார மையத்தில் இருந்த ஊழியர்கள் கட்டிடத்தை விட்டு விரைவாக வெளியேறினர்.

விரைந்து வந்த தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் அறை முழுவதும் சூழ்ந்திருந்த கரும்புகையை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, வெளியேற்றினர். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் ரஷ்ய கலாசார மையத்தின் முதல் மாடியில் இருந்த ரஷ்ய மொழி ஆசிரியர்களின் அறையில் இருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/fire-at-the-russian-cultural-center-in-thenampet-chennai-717002