வட சென்னையில் நள்ளிரவில் நடந்த கொடூர கொலை… மெட்ராஸ் பட பாணியில் சம்பவம் – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை, புதுப்பேட்டை பகுதியில் ரவுடியை ஓட, ஓட விரட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு சுதந்திரா நகர், ஹவுசிங் போர்டு, பி பிளாக்கை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் மகன் மோக்கா (எ) மோகன் (22). இவர் அவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், புதுப்பேட்டை புறா என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று இரவு, மோகன் அவரின் நண்பர்கள், புதுப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிக்கு சென்றனர். பின்னர், மோகன் தன் வீடு திரும்பினார். அப்போது, மோகன் மற்றும் அவரின் நண்பர் ஷாம் ஆகியோரை, புதுப்பேட்டையில் இருந்து ஒரு கும்பல் தேடி வந்தது தெரியவந்தது. என் ஏரியாவில், என்னை வந்து தேடியது யார் என ஆத்திரமடைந்த மோகன், இரண்டு இரு சக்கர வாகனத்தில், நண்பர்கள் சந்தோஷ், அருணாச்சலம் (எ) ஷாம், சுனில் குமார், மனோஜ் ஆகியோருடன் , நள்ளிரவில் புதுப்பேட்டைக்கு சென்றார்.

அங்குள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு சென்ற மோகன் மற்றும் அவரின் நண்பர்கள், அங்கு நின்றிருந்த ஒரு கும்பலிடம், என்னை யாருடா தேடினது? அவன் ஏரியாவுக்கு நான் வந்து இருக்கேன். அவன தில்லு இருந்தா வரச்சொல்லு என மிரட்டல் விடுத்தார்..

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு மோகனை வெட்டியது. இதை பார்த்ததும், மோகனுடன் வந்த நண்பர்கள் தப்பித்து சென்றனர். மோகன் மட்டும் தனியாக மாட்டிக்கொண்டார்.

https://news.google.com/publications/CAAqBwgKMPOGqQsw5ZHBAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

புதுப்பேட்டை, ஆய்யசாமி தெரு வழியாக மோகன் ஓடினார். ஆனால், அந்த கும்பல், ஓட, ஓட விரட்டி மோகனை வெட்டிக்கொன்றது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவல் கிடைத்து, எழும்பூர் போலீசார் சம்பவம் இடத்துக்கு வந்து, மோகன் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கொல்லப்பட்ட மோகன் மீது, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஆயிரம் விளக்கு மோகனுக்கும், புதுப்பேட்டை புறா என்பவருக்கும் யார் ஏரியா தவுலத் என்ற யூகோ இருந்தது. இந்த பிரச்சினையில் தான் மோகன் கொல்லப்பட்டதும். இந்த வழக்கில், விகரம், யூடியூப் வெங்கடேசன், மோசஸ், அருண் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/crime/rowdy-killed-by-opposite-gang-at-midnight-in-north-chennai/articleshow/92039703.cms