உலகின் முதல்முறையாக சென்னை ஐஐடியில்” இலவச ஆன்லைன் கணித வகுப்புகள்”
உலகின் முதல்முறையாக சென்னை ஐஐடியில் 10 லட்சம் பேருக்கு அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் என்ற தலைப்பில் இலவச ஆன்லைன் கணித வகுப்புகள் துவங்க உள்ளன. இதற்கான பதிவுகள் இணையதளம் வாயிலாக தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற 24 ஆம் தேதி வரை இதற்கான பதிவுகள் நடைபெறும். வகுப்புகள் முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு கிரேடிங் சர்டிபிகேட்டுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக மட்டும் குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. இதில் இந்தியாவில் உள்ள சுமார் 10 லட்சம் பேர் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஜூலை 1 ஆம்தேதி வகுப்புகள் துவங்கும் என சென்னை ஐஐடி தலைவர் பேராசிரியர் காமகோடி தெரிவித்துள்ளார்.
Source: https://www.thanthitv.com/News/TamilNadu/the-worlds-first-free-online-math-classes-at-iit-chennai-123280