சென்னை போர்டு தொழிற்சாலை.. மீண்டும் இயங்க துவங்கியது..! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு-க்குச் சொந்தமான தொழிற்சாலையில் மே 30 முதல் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட காரணத்தால் இயங்காமல் இருந்தது.

இந்நிலையில் இத்தொழிற்சாலையின் ஒரு பகுதி ஊழியர்கள் வேலை செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

போர்டு

அமெரிக்கப் போர்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான போர்டு இந்தியாவுக்குச் சொந்தமான சென்னை தொழிற்சாலையில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உற்பத்தியை மீண்டும் தொடங்க ஒப்புதல் அளித்ததால் தொழிற்சாலை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை தொழிற்சாலை

சென்னை தொழிற்சாலை

ஊழியர்கள் போராட்டத்திற்குப் பின்பு ஜூன் 14 முதல் இரண்டு ஷிப்டுகளில் தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையில் உறுதி அளித்த 300 பேரில் 100-150 பேர் மட்டுமே பணியைத் தொடங்க வந்தாகத் தெரிவித்துள்ளனர். இத்தொழிற்சாலையில் மொத்தம் 2,600 பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஊழியர்கள் போராட்டம்

ஊழியர்கள் போராட்டம்

ஜூன் 14 முதல் உற்பத்தியை மீண்டும் துவங்கி, உற்பத்தி பணிகளை முடிக்க நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பிரிப்புத் தொகுப்பு அதாவது severance pay அளிக்கப்படும் எனப் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 14

ஜூன் 14

சென்னை தொழிற்சாலையில் மிகவும் குறைவான ஏற்றுமதி உற்பத்தியை மட்டுமே முடிக்க உள்ளது என நிறுவனம் கூறியுள்ளதுய, ஜூன் 14 முதல் ஊழியர்கள் உற்பத்தியை மீண்டும் தொடங்கவில்லை என்றால், மீதமுள்ள ஏற்றுமதி அளவுகளின் உற்பத்தியை நிறுத்திவிட்டு வாகன உற்பத்தியை மொத்தமாக நிறுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும் எனத் தெரிவித்துள்ளது போர்டு.

குஜராத் போர்டு தொழிற்சாலை

குஜராத் போர்டு தொழிற்சாலை

ஃபோர்டு நிறுவனத்தில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், குஜராத்தில் இருக்கும் ஃபோர்டு தொழிற்சாலையைக் கைப்பற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அம்மாநில சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இழப்பீடு தொகை

இழப்பீடு தொகை

போர்டு நிர்வாகம் இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளை மூட முடிவு செய்த நிலையில், ஊழியர்கள் தங்களுக்கான இழப்பீடு தொகையை கூடுதலாக கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பல வாரங்களாக தொழிற்சாலை மூடப்பட்டு இயங்காமல் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Ford resumes production at chennai factory with 150 workers

Ford resumes production at chennai factory with 150 workers சென்னை போர்டு தொழிற்சாலை.. மீண்டும் இயங்க துவங்கியது..!

Source: https://tamil.goodreturns.in/news/ford-resumes-production-at-chennai-factory-with-150-workers-029021.html