சென்னை சமூகநலத்துறை வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை மாவட்ட சமூக நலத்துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Chennai social welfare department invites application for various posts: பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில், பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அவசர மற்றும் உடனடி தேவைகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக செயல்படும், மருத்துவ உதவி ஆலோசனை, சட்டம் மற்றும் உளவியல் ஆதரவு வழங்கும் நோக்கில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கரூர் நீதிமன்ற வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மைய நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

மூத்த ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

வழக்கு அலுவலர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி : சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

பன்முக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : ஏதாவது அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,400

பாதுகாப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/06/2022061491.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 ஆவது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை – 600001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/06/2022061491.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/education-jobs/chennai-social-welfare-department-invites-application-for-various-posts-468720/