சென்னையில் வெயில் பிரைட்டா காயுதா?.. அப்போ இன்னிக்கும் சம்பவம் இருக்கு!.. வெதர்மேன்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருந்தால் மீண்டும் ஒரு முறை மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை! – வீடியோ

நேற்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்றும் சொல்லப்பட்டது.

இரவு முழுக்க பிச்சு எடுத்த மழை.. சென்னையில் இன்றும் பெய்யுமா? ஜில்லென வந்த வானிலை ரிப்போர்ட்!இரவு முழுக்க பிச்சு எடுத்த மழை.. சென்னையில் இன்றும் பெய்யுமா? ஜில்லென வந்த வானிலை ரிப்போர்ட்!

சென்னையில் மழை

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் வேளச்சேரி, முகப்பேர், பட்டினப்பாக்கம், அண்ணா நகர், கிரீன்வேஸ் சாலை, அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆலப்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது. இதனால் சென்னை குளிர்ந்து நிச்சயம் இந்த மழை இப்போது அவசியம்.

இடி மின்னலுடன் கூடிய மழை

இடி, மின்னலுடன் கூடிய மழை அதிகாலை 2. 30 மணி வரை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எத்தனை சென்டி மீட்டர் மழை பெய்தது என்பதை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருப்போம்.

பள்ளி, கல்லூரி

அதே வேளையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் நேரத்தில் மழை நின்றிருக்கும். சாலையில் இருந்த தண்ணீர் வடிந்தோடியிருக்கும். சாலைகளை பார்க்கும் போது மழை பெய்ததா என குழம்பும் அளவுக்கு வறண்டு போய் இருக்கும். குழந்தைகள் எல்லாம் லீவு கிடைக்கும் என நினைப்பார்கள், இந்த ஆசையை குழி தோண்டி புதைச்சிருங்க.

மழைக்கு வாய்ப்பிருக்கிறது

இன்றும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. எப்போதும் ஒரு பெரிய மழை பெய்தவுடன் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு பூமியை குளிர்ச்சி அடையச் செய்யும். இன்று பிரகாசமான சூரிய வெளிச்சம் இருந்தால் நமக்கான மழை பெய்ய அதிகம் வாய்ப்பிருக்கிறது. சென்னையில் மழை வேண்டுமானால் 90 சதவீதம் பிரகாசமாக இருக்கும். இல்லாவிட்டால் நள்ளிரவில் மழை பெய்யும். அதுபோல் இந்த வாரத்தில் இன்னொரு நாளும் மழை பெய்யும். எனவே குடை, ரெய்ன் கோட்டுடன் போங்க என தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that there will be one more chance for rains in Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-says-about-another-chance-for-rains-in-chennai-462970.html