சென்னை சில பகுதிகளில் தண்ணீர் நிறுத்தம்: எங்கு தெரியுமா? – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரலை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தென் சென்னையில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை  நெம்மேலியில் உள்ள கடல் நீரலை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தென் சென்னையில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்க நிலையத்தில் தண்ணீர் கசிவை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதனால்  தென் சென்னை பகுதிகளான அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், திருவான்மியூர், மந்தவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட வாய்புகள் உள்ளது. மேலும் 23ம் தேதி வழக்கம்போல் தண்ணீர் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் உடனடி தண்ணீர் தேவைக்காக 8144930909/ 8144930913/ 8144930914 /8144930915 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளுமாறு தகவல் வெளியாகி உள்ளது.

Source: https://tamil.indianexpress.com/uncategorized/water-will-be-stopped-these-areas-in-chennai-469622/