நெம்மேலி நிலையத்தில் திடீர் பழுது: சென்னை பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் – தினமணி

சென்னைச் செய்திகள்

நெம்மேலி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வரும் வியாழக்கிழமை வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த குடிநீர் விநியோக நிறுத்தம் செவ்வாய்க்கிழமை இரவு 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
 நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளதால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உளஅளது. இதனால், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் வரும் வியாழக்கிழமை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
 அவசரத் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் லாரிகள் மூலமாக குடிநீர் பெறலாம். மயிலாப்பூர், மந்தைவெளி பகுதியினர் 81449 30909 என்ற எண்ணிலும், அடையார், வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதி வாசிகள், 81449 30913 என்ற எண்ணிலும், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி வாசிகள், 81449 30914 என்ற எண்ணிலும், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதி வாசிகள், 81449 30915 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு லாரிகள் வழியாக குடிநீர் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jun/22/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3866640.html