3வது நாளாக.. சென்னையில் பிச்சு எடுத்த மழை.. பல இடங்களில் தேங்கிய தண்ணீர்.. இன்றும் பெய்யுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது. இரவு முழுக்க பல பகுதியில் மழை வாட்டி எடுத்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுக்க சென்னையில் மழை பிச்சு எடுத்தது.

இரவு 9 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை அதிகாலை வர விடாமல் பெய்தது.

சென்னையில் இரவு முழுக்க பெய்த மழை.. பல பகுதிகளில் தேங்கிய நீர்.. இன்று மழை பெய்யுமா? ரிப்போர்ட்சென்னையில் இரவு முழுக்க பெய்த மழை.. பல பகுதிகளில் தேங்கிய நீர்.. இன்று மழை பெய்யுமா? ரிப்போர்ட்

சென்னை மழை

சென்னையில் விடாமல் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் இன்றைய வானிலை குறித்து வானிலை மையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த வானிலை அறிக்கைபடி,

22.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.06.2022, 24.06.2022, 25.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

நேற்று பெய்த மழை

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) 8, திருவாலங்காடு (திருவள்ளூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), பொன்னை அணை (வேலூர்), மரக்காணம் (விழுப்புரம்), குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), பந்தலூர் தாலுகா அலுவலகம். (நீலகிரி) தலா 7, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தேவாலா (நீலகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), செருமுள்ளி (நீலகிரி) தலா 6, தரமணி ARG (சென்னை மாவட்டம்), திரூர் KVK (திருவள்ளூர்), மேலாளத்தூர் (வேலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), ஆவடி (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) தலா 5, DGP அலுவலகம் (சென்னை), கூடலூர் பஜார் (நீலகிரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), KVK காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), வால்பாறை PTO (கோவை), குடியாத்தம் (வேலூர்), திருத்தணி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கலவாய் பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை) தலா 4, கலவை AWS (இராணிப்பேட்டை), சின்னக்கலர் (கோயம்புத்தூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்), R.K.பேட்டை (திருவள்ளூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), நடுவட்டம் (நீலகிரி), சென்னை விமான நிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), வாலாஜா (இராணிப்பேட்டை), சிவகங்கை (சிவகங்கை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), வேலூர் (வேலூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 3, அம்முண்டி (வேலூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), பொன்னேரி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சோலையார் (கோவை), கிளென்மார்கன் (நீலகிரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), போளூர் (திருவண்ணாமலை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 2, காட்பாடி (வேலூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), திண்டிவனம் (விழுப்புரம்), மாதவரம் AWS (திருவள்ளூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), ஓமலூர் (சேலம்), மேல் பவானி (நீலகிரி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), ஏற்காடு (சேலம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), செய்யூர் (செங்கல்பட்டு), MRC நகர் ARG (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), ACS மருத்துவக் கல்லூரி ARG (காஞ்சிபுரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), மேட்டூர் (சேலம்) தலா 1.

மீனவர்கள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை : 22.06.2022, 23.06.2022: : இலட்சத்தீவு பகுதி, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.06.2022, 25.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

காற்று வீசும்

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.06.2022, 22.06.2022: குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

English summary
Heavy rain in Chennai: Many places are flooded with rain water, What will be the weather today? சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது. இரவு முழுக்க பல பகுதியில் மழை வாட்டி எடுத்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-in-chennai-many-places-are-flooded-with-rain-water-what-will-be-the-weather-today-463197.html