‘அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை’: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – தினமணி

சென்னைச் செய்திகள்

அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடித்துவரும் நிலையில் பொதுக்குழுவை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதன்படி பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் தடைவிதிக்க முடியாது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏற்கெனவே உரிமையியல் நீதிமன்றமும் பொதுக்குழுவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jun/22/aiadmk-general-body-meeting-not-barred-chennai-high-court-orders-3866781.html