சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்: விமான நிலையத்தில் குவிந்த ஆதரவாளர்கள் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்; விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

OPS return to Chennai from Delhi supporters welcomes warmly: டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் சலசலப்புடன் நிறைவடைந்த நிலையில், அன்று மாலையே டெல்லி சென்றார். அவர் டெல்லி செல்வதற்கு முன் பல்வேறு ஊகங்கள் வெளிவந்த நிலையில், விமான நிலையத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கலந்துக் கொள்வதறகாக டெல்லி செல்வதாக கூறிச் சென்றார்.

இதையும் படியுங்கள்: ஒற்றைத் தலைமை பிரச்னை; பா.ஜ.க தலையீடு இல்லை: ஜெயக்குமார் உறுதி

நேற்று, திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் குவிந்த அவரது ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் வாழ்க என கோஷம் எழுப்பினர். அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்களைச் சந்திப்பார் அல்லது தொண்டர்களிடம் ஏதாவது பேசுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ் எதுவும் சொல்லாமல் சென்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/ops-return-to-chennai-from-delhi-supporters-welcomes-warmly-470888/