வாகன ஓட்டிகள் உஷார்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை பரங்கிமலையில்  மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால் ஜிஎஸ்டி சாலையில் இன்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது.

சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள் செல்லும் சாலையில் மற்றும் வெளி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நாளை வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால், ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,   ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திபாரா பாலத்தில் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்றடையலாம்.

பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதும் இன்றி வழக்கமான சாலையில் (கத்திபாரா வழியாக) செல்லலாம்.

இதையும் படிக்க: மீண்டும் மிரட்டும் கொரோனா… தமிழகத்தில் ஒரே நாளில் 1,359 பேருக்கு தொற்று.. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 1000 பேருக்கு பாதிப்பு

வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் தண்டுமா நகர் ‘யூ’வளைவு எடுத்து சிப்பெட் சந்திப்பில் வலதுபுறம் திருப்பி திரு.வி.க.தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம்.

வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலையில் இடது புறமாக திருப்பி திரு.வி.க.தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/alert-gst-road-traffic-diversion-today-and-tomorrow-mur-763022.html