சென்னை ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார், சந்தேகத்துக்கிடமான பார்சல்கள் மற்றும் நபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, குண்டூரை சேர்ந்த சாம்பசிவராவ் என்பவரின் உடைமைகளை பரிசோதனை செய்தபோது, 100 கிராம் எடை கொண்ட 8 தங்க கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Source: https://www.thanthitv.com/latest-news/rs-90-lakhs-seized-at-chennai-egmore-railway-station-124350