சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவு இடி மின்னலுடன் பெய்யத்தொடங்கிய கனமழை போரூர், குன்றத்தூர், மவுலிவாக்கம், கொரட்டூர், திநகர், எழும்பூர், வடபழனி, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி, அசோக் நகர், அண்ணாநகர் மற்றும், சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் என பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

மேலும் சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சி நிலவி வருகிறது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/widespread-rain-in-various-parts-of-chennai-and-suburbs-734937