சென்னை ரோட்டில் ஹார்ன் அடிக்க போறீங்களா? இனிமே யோசிச்சு அமுக்குங்க பாஸ்.. வந்தது அதிரடி ரூல்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை சாலையில் போக்குவரத்து விதிகளை கடுமையாக கடைபிடிக்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் போக்குவரத்து போலீசார் வழங்கி உள்ளனர்.

சென்னையில் சமீப காலமாக போக்குவரத்து விதிகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் பைக்கில் பயணிக்கும் இரண்டு பேரும் ஹெல்மெட் போட வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டது.

அதேபோல் சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல இடங்களில் புதிய ஸ்பீட் பிரேக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சென்னை மருத்துவம்

சர்வதேச அளவில் பல வளர்ந்த நாடுகளை கூட சென்னை மருத்துவ துறையில் பின்னுக்கு தள்ளி டாப்பில் இருக்கிறது. இப்படிப்பட்ட சென்னையில் சிகிச்சை பெற தான்சானியாவில் இருந்து 5454 பயணம் செய்து பெண் ஒருவர் தனது மகளுடன் வந்து இருக்கிறார். விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அந்த சிறுமியை சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர். அப்படி அந்த சிறுமிக்கு என்ன பிரச்சனை?

ஹை டெசிபல்

ஆனால் சென்னையில் ஹை டெசிபல் ஹார்ன் பயன்படுத்த தடை உள்ளது. அதிலும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அருகே ஹார்ன் அடிக்கவும் தடை உள்ளது. ஆனால் இதையும் மீறி வாகன ஓட்டிகள் அடிக்கடி ஹார்ன் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஹார்ன் அடிப்பதை சரியாக கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் சென்னை போலீசும் இதில் பெரிய கட்டுப்பாடுகளை விதிப்பது இல்லை.

அபராதம்

ஆனால் ஜூலை மாதத்தில் இருந்து அதிக டெசிபலில் ஹார்ன் அடிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 100 ரூபாய் வரை முதல் கட்டமாக இந்த அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 2019 மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின் 1000 – 2000 ரூபாய் அபராதம் வரை ஹார்ன் அடிக்கும் நபர்களிடம் வசூலிக்கப்படும்.

கருவிகள்

இதற்காக தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை புதிதாக உபகரணங்களை வாங்க உள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து புதிய கருவிகள் வாங்கப்பட்ட உள்ளது. ஒளி மாசு எவ்வளவு ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க இந்த கருவிகள் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஹை டெசிபலில் ஹார்ன் அடிப்பவர்கள், தடை செய்யப்பட்ட இடத்தில் ஹார்ன் அடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.

English summary
Are you going to horn in Chennai road? Think twice before you do it. சென்னை சாலையில் போக்குவரத்து விதிகளை கடுமையாக கடைபிடிக்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் போக்குவரத்து போலீசார் வழங்கி உள்ளனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/are-you-going-to-horn-in-chennai-road-think-twice-before-you-do-it-464406.html