திரௌபதி முர்மு.. அதிரும் பெயர்.. நாளை சென்னை வருகிறார்.. அவங்க 2 பேரும் எப்படி? செம எதிர்பார்ப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு, நாளை சென்னை வர உள்ளார்.. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து முர்மு வாக்கு கேட்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க போகிறது.. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார்… இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

திரௌபதி முர்மு.. பேரை கேட்டதுமே முதல்வர் ஸ்டாலினுக்குதிரௌபதி முர்மு.. பேரை கேட்டதுமே முதல்வர் ஸ்டாலினுக்கு

அண்ணா அறிவாலயம்

நேற்றைய தினம், யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்திருந்தார்.. அண்ணா அறிவாலயத்தில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அப்போது அவர் ஆதரவு கோரினார்… முன்னதாக முதல்வர் ஸ்டாலின் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.. காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சின்ஹா கோரினார்..

திரௌபதி

அதேபோல, பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் திரௌபதி முர்மு.. இவரும் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி கொண்டு வருகிறார்… அந்த வகையில், நாளைய தினம், திரவுபதி முர்மு, சென்னை வருகிறார்.. அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களைச் சந்தித்து அவர் ஆதரவு கோர உள்ளார். இதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது… இந்த சந்திப்பானது ஸ்டார் ஹோட்டலில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரௌபதி முர்மு

மேலும், கூட்டணி கட்சிகளான பாமக தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து திரௌபதி வாக்கு கேட்கிறார். முன்னதாக, புதுச்சேரிக்கு செல்லும் திரௌபதி முர்மு அங்குள்ள கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து பேசுகிறார். தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுகதான் பிரதான ஆதரவு தரும் கட்சியாக பாஜகவுக்கு உள்ளது.. ஆனால் அதிமுகவில் தற்போது நிலைமை சரியில்லை.. அவர்களுக்குள்ளேயே முட்டல் மோதல்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன..

எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ், எடப்பாடி இவர்கள் இருவருமே தற்போது பிளவுபட்டு நிற்கிறார்கள்.. கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில்கூட பங்கேற்றபோதும் 2 பேரும் பேசிக் கொள்ளவில்லை.. அந்த பொதுக்குழுவுக்கு பிறகுதான் மோதலே அதிகமாகிவிட்டது.. இந்த சூழ்நிலையில் சென்னை வரும் திரௌபதி முர்முவை, 2 பேரும் தனித்தனியே சந்திப்பாரா? அல்லது ஒரே நேரத்தில் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

English summary
presidential candidate draupadi murmu to visit chennai tomorrow: presidential election திரௌபதி முர்மு நாளை சென்னை வந்து, அதிமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்

Source: https://tamil.oneindia.com/news/chennai/presidential-candidate-draupadi-murmu-to-visit-chennai-tomorrow-presidential-election-464510.html