அதிர்ந்த சென்னை! களமிறங்கிய நாம் தமிழர்! அக்னிபாத்துக்கு எதிர்ப்பு! 6 தமிழர்களையும் விடுவிக்க கோஷம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநில, மத்திய அரசை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆறு தமிழர்களை விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி வருகிறார்.

தமிழக அரசு தனது அதிகாரம், சட்ட வழிகளை பின்பற்றி சிறையில் உள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும். இதனை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நுபுர் ஷர்மாவை கண்டிப்பது இருக்கட்டும்! இதுவரை தண்டிக்கப்படவில்லையே.. விளாசும் நாம் தமிழர் சீமான்!நுபுர் ஷர்மாவை கண்டிப்பது இருக்கட்டும்! இதுவரை தண்டிக்கப்படவில்லையே.. விளாசும் நாம் தமிழர் சீமான்!

சென்னையில் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் தான் ஆறு தமிழர்கள் விடுதலை மற்றும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பதாகைகள் ஏந்தி கோஷம்

மேலும் ஆறு தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் கோஷமிடப்பட்டது. உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது. அதோடு அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழக அரசு 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர்.

சீமான் பேச்சு

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேச முன்னுரிமை கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப்பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், வனவேங்கைககள் கட்சியின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகிறார்.
முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

நம்ப வைத்து கழுத்தறுக்கும் திமுக.. பாஜக மாதிரிதான் செயல்படுது – சீறிய சீமான்

வாழ்வாதாரம் கேள்விக்குறி

அப்போது அவர் ‛‛அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையாகும். வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து பயிற்சி வழங்க முடியாது என்பதால் இதனை பாஜக அரசு செய்கிறது. இத்திட்டத்தில் 4 ஆண்டு பணி முடித்த பிறகு அவர்கள் என்ன செய்வார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 6 பேர் விடுதலையை பொறுத்தமட்டில் தமிழக அரசு இரட்டை வேடம் போடக்கூடாது. அவர்களை விடுவிக்க வேண்டும்” என கூறினார்.

English summary
A protest held by Nam Tamilar Party in Chennai against the state and central government for demanding 6 tamilar releases of Rajiv murder case and abandonment of the Agnipath project.

Source: https://tamil.oneindia.com/news/chennai/seeman-nam-tamilar-party-protest-in-chennai-against-agnipath-and-demanding-6-tamillar-releases-464840.html