சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அசோக்பில்லர் , சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர் முகப்பேரு, பாடி, பல்லாவரம், மதுரவாயல், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chance-of-moderate-rain-in-chennai-for-the-next-2-hours-738517