உஷார்… சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

திரையரங்குகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவதை அந்த நிறுவனங்களே உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வின் போது முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும்படி நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொதுமக்களும் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துநர் உறுதிசெய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(Chennai)

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/rs-500-fine-for-not-wearing-face-mask-in-chennai-from-today-sur-767572.html