சென்னை ,நேப்பியர் பாலத்தில் நாளை போக்குவரத்து மாற்றம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ராஜாஜி சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் – அண்ணா சாலை – மன்ரோ சிலை – பல்லவன் பாயின்ட் – பெரியார் சிலை – அண்ணா சிலை – இடது புறம் – வாலாஜா சாலை – வலது புறம் – உழைப்பாளர் சிலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம் .

காமராஜர் சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக ராஜாஜி சாலை செல்லும் வாகனங்கள் அனைத்து உழைப்பாளர் சிலை – வாலாஜா சாலை – அண்ணா சிலை – அண்ணா சாலை –பெரியார் சிலை – பல்லவன் பாயின்ட் – மன்ரோ சிலை – வாலாஜா பாயின்ட் – கொடி மரச் சாலை – போர் நினைவுச் சின்னம் வழியாக ராஜாஜி சாலை செல்லலாம் . என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-napier-bridge-traffic-change-tomorrow-739245