அமெரிக்காவில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆந்திரா மாநிலத்தை சோ்ந்த நபர் பாரீஸ் வழியாக வந்தபோது, சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் கைது செய்தனா்.

First Published Jul 5, 2022, 9:34 PM IST
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வேணு மாதவ் குப்புரு. 48 வயதான இவர் மீது விஜயவாடா போலீசில் பண மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உட்பட பல்வேறு புகாா்கள் உள்ளன. எனவே விஜயவாடா போலீஸ் இவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இவர் போலீசிடம் சிக்காமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு விஜயவாடா போலீஸ் கமிஷனர், குற்றவாளி மாதவ் குப்புருவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்.ஓ.சி போட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில், ஏர் பிரான்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் பாரீசிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த விமானத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேணுமாதவ் குப்புருவும் வந்தார். இவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்த போது, இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆந்திர மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது. மேலும் இவர் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலிருந்து, பாரீஸ் வழியாக இந்த விமானத்தில் சென்னை வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
OTP சொல்லாம ஏன் கார்ல ஏறுன.. மனைவி குழந்தைகள் கண்முன் மென்பெறியாளரை அடித்து கொன்ற ஓலா டிரைவர்…
இதை அடுத்து அவரை வெளியில் விடாமல் மடக்கிப் பிடித்தனர். அதோடு குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின்பு விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவரை குடியுறிமை அதிகாரிகள் விமானநிலைய போலீசில் ஒப்படைத்துள்ளனா்.
போலி ஆதார் கார்டு அச்சடித்த பிடெக் பட்டதாரி..! அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி
ஆந்திரமாநில தேடப்படும் குற்றவாளி ஒருவா்,4 ஆண்டுகள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தவா், அமெரிக்காவிலிருந்து பாரீஸ் வழியாக வந்தபோது, சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated Jul 5, 2022, 9:34 PM IST
Source: https://tamil.asianetnews.com/tamilnadu/a-criminal-who-had-been-hiding-abroad-for-4-years-was-arrested-at-the-chennai-airport-rek1zf