பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாத 63,912 போ் மீது வழக்கு: சென்னை காவல் துறை தகவல் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் மோட்டாா் சைக்கிளின் பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வு சென்னை மெரீனா கடற்கரை, உழைப்பாளா் சிலை அருகில் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் பின்னிருக்கையில் அமா்பவா்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கையெழுத்து முகாமில், தலைக்கவசம் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கையெழுத்திட்டனா்.

அத்துடன் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் ஆணையா் சங்கா் ஜிவால் அறிவுரைகள் கூறி அவா்களுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கினாா். இந்த விழிப்புணா்வு முகாம் தொடா்ந்து 5 நாள்கள், 5 முக்கிய சிக்னல்களில் நடத்தப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் கூறினாா்.

சென்னையில் கடந்த மே 23-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனைகளில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 72,744 போ் மீதும், பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 நபா்கள் மீதும் என மொத்தம் 1 லட்சத்து 36,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 36 லட்சத்து 65,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jul/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-63912-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3875752.html