சந்து, பொந்துல தள்ளாடும் சென்னை… என்னங்க இதெல்லாம்? கடுப்பில் மக்கள்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
இந்தியாவில் 4வது பெரிய நகரமாக சென்னை விளங்குகிறது. பலதரப்பட்ட தொழில்களை சார்ந்த வலுவான பொருளாதார கட்டமைப்புடன் காணப்படுகிறது. இங்கு பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்காக சென்னைக்கு இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மாநகரை விரிவுபடுத்தி போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சென்னையின் தற்போதைய நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்கின்றனர். ஏனெனில் உட்புற சாலைகள் பலவும் மோசமான நிலையில் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 1,737 உட்புறச் சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளது. இதன் மொத்த தூரம் 257.89 கிலோமீட்டர் ஆகும்.
ப்ராவோ ஓடுதளம்: சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் சூப்பர் ஏற்பாடு!
இவற்றை சரிசெய்ய 169.30 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மண்டல வாரியாக பார்க்கும் போது, திருவொற்றியூர் 51, மணலி 68, மாதவரம் 135, தண்டையார்பேட்டை 251, ராயபுரம் 56, திரு.வி.க நகர் 109, அம்பத்தூர் 150, அண்ணா நகர் 127, தேனாம்பேட்டை 68, கோடம்பாக்கம் 129, வளசரவாக்கம் 43, ஆலந்தூர் 209, அடையாறு 58, பெருங்குடி 186, சோழிங்கநல்லூர் 97 என்ற எண்ணிக்கையில் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டியிருக்கிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் சாலைகள் சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க முடியாத சூழல் நிலவுகிறது. கோடைக் காலத்திற்கு முன்பே திட்டமிட்டு பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டிருந்தால் மழைக் காலத்திற்கு முன்பாக சீரான சாலைகள் கிடைத்திருக்கும். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

வேற லெவலுக்கு மாறும் சென்னை; 5 இடங்களில் மாஸான ’Mega Streets’ திட்டம்!

தற்போதைய சூழலில் சீரமைப்பு பணிகள் எதுவும் தொடங்க வாய்ப்பில்லாத காரணத்தால் மழையால் பள்ளமான இடங்கள், சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் பிரதான மற்றும் முதன்மை சாலைகளில் 80 சதவீத இடங்களில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/people-worried-about-hundreds-of-interior-roads-in-chennai-city-awaiting-for-repairs/articleshow/92894173.cms