அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த.. சூப்பர் பிளான் ரெடியா இருக்கு! சென்னை மேயர் பிரியா அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து சென்னை மேயர் பிரியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த இரு ஆண்டுகளாக மூடப்பட்டே இருந்தது.

மாணவர்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது

வாட்ஸ்அப்பில் திடீரென வந்த மெசேஜ்! குழம்பிப் போன அதிகாரிகள்.. மேயர் பிரியா பெயரில் புதுவித மோசடிவாட்ஸ்அப்பில் திடீரென வந்த மெசேஜ்! குழம்பிப் போன அதிகாரிகள்.. மேயர் பிரியா பெயரில் புதுவித மோசடி

பள்ளிகள்

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. மாணவர்களும் உற்சாகமாகப் பள்ளி சென்று வருகின்றனர். அதேபோல கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இருப்பினும், மாநகராட்சிக்கு வெளியே இருக்கும் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ஆலோசனை

இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த எடுக்கும் நடவடிக்கை குறித்து சென்னை மேயர் பிரியா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள 15 முதல் 22வது வார்டு வரை நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்பேடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேயர் பிரியா

இந்த கூட்டத்திற்குப் பின்னர் மேயர் பிரியா கூறுகையில், “மாமன்ற உறுப்பினர்களின் சார்பாக ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் வெள்ளி தோறும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளை கூற முடியும். இந்த குறைகளைத் தீர்க்க வழிவகைகள் செய்யப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திட்டம்

சென்னை மாநகராட்சி உடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளை மாநகராட்சி உடன் இணைத்து அந்த பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் அதற்கான தீர்வு காணப்படும். ஒரு ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டு பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

English summary
Chennai Mayor Priya about Education quality in govt schools: (அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து மேயர் பிரியா) Plan to increase Education quality in Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-mayor-priya-says-steps-will-be-taken-to-increase-education-quality-in-govt-schools-466596.html