ஒலிம்பியாட்: சென்னை நேப்பியர் பாலத்தில் செஸ் தீம்! கண்கவரும் காட்சியால் மெய் சிலிர்க்கும் மக்கள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதால், சென்னை நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் தீம்மீல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

செஸ் போர்டுகளில் இடம்பெறக் கூடிய கருப்பு வெள்ளை நிறங்களில் கண்கவர் ஓவியத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி!அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி!

இதனால் நேப்பியர் பாலம் வழியாக செல்லக் கூடியவர்களும், செஸ் ஆர்வர்லர்களும் அங்கு ஆர்வமாக நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட்

2022-ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெறவிருந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அந்தப் போட்டியை ரத்து செய்தது. இதையடுத்து அந்த வாய்ப்பு இந்தியாவுக்கு அதில் குறிப்பாக நம் தமிழகத்திற்கு 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து இதற்காக தமிழக அரசு ரூ.92 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

28-ஆம் தேதி தொடக்க விழா

இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறும் சரவதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வருக வருக என செஸ் ஒலிம்பியாட் தீம் பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அந்த வரவேற்பு பாடலில் முதல்வர் ஸ்டாலினும் ஓரிரு நிமிடங்கள் வந்து செல்கிறார்.

நேப்பியர் பாலம்

சென்னையின் பிரதான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் தீம்மில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஸ் போர்டுகளில் இடம்பெறக் கூடிய கருப்பு வெள்ளை நிறங்களில் கண்கவர் ஓவியத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. வாகன ஓட்டிகளுக்கும், நேப்பியர் பாலம் வழியாக செல்லக்கூடிய வழிபோக்கர்கள் அனைவருக்கும் ஒரு புது வித அனுபவத்தை தரும் வகையில் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டும் இந்த ஓவியப் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்ஃபி

பொதுவாகவே நேப்பியர் பாலத்தில் நின்று செல்ஃபி எடுப்பவர்கள் ஏராளம் ஏராளம். அதிலும் இப்படியொரு புதிய தீம்மில் கண்கவர் ஓவியங்களின் பின்னணியில் நின்று செல்ஃபி எடுக்க விரும்பாதவர்கள் இருப்பார்களா என்ன. அந்த வழியாக செல்பவர்கள் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் நேப்பியர் பாலத்தை பார்வையிடுவதற்காக படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். வார விடுமுறை நாட்கள் என்பதால் பீச்சுக்கு வருபவர்கள் பலரும் அப்படியே அருகில் உள்ள நேப்பியர் பாலத்திற்கும் ஒரு விசிட் அடிக்கத் தவறுவதில்லை.

English summary
Chess theme at Chennai Napier Bridge: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதால், சென்னை நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் தீம்மீல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chess-theme-at-chennai-napier-bridge-466581.html