விலையை பற்றி கவலை இல்லை… சென்னை காசிமேட்டில் மீன்வாங்க அலை அலையாக குவிந்த அசைவ பிரியர்கள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விடுமுறை தினமான இன்று மீன்களை வாங்க மீன்பிரியர்கள் குவிந்ததால், மீன்விற்பனை களைகட்டியுள்ளது.

சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு கூடுவது வழக்கம். அதேபோன்று இன்றும், காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் ஏராளமான அசைவ பிரியர்கள் மீன்களை வாங்குவதற்காக கூடியுள்ளனர். காலை முதலே மக்கள் அலை அலையாக வந்து, தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

காசிமேடு கடற்கரையிலிருந்து கடலுக்குள் விசைப்படகுகள் மூலமாக மீன்களை பிடித்து நேரடியாக காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படுவதால் சென்னையில் உள்ள பல மொத்த வியாபாரிகளும் மீன் அசைவ பிரியர்களும் மீன்களை வாங்குவதற்காக வந்துள்ளனர்.

விலைப்பட்டியல்

வஞ்சிரம் மீன் கிலோ 1200 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், கொடுவா கிலோ 800 ரூபாய்க்கும், பர்லா கிலோ 350 ரூபாய்க்கும், பாறை கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சங்கரா 400 ரூபாயிலிருந்தும், கடம்மா கிலோ 400 ரூபாயிலிருந்தும், நெத்திலி மீன் கிலோ 300 ரூபாய் ரூபாயிலிருந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இறால் நண்டு போன்றவை 350 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வஞ்சிரம், பாறை, வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை, கடந்த வாரத்தை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், காசிமேடு மீன் விற்பனை கூடம் திருவிழா கோலம்போல் காட்சியளிக்கிறது.

English summary
People throng to buy fish in Chennai Kasimedu Fish Market today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/crowds-throng-chennai-kasimedu-fishmarket-466641.html