சென்னை போக்குவரத்துக் காவல் துறையின் வித்தியாசமான கேள்வி; நெட்டிசன்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்! – Vikatan

சென்னைச் செய்திகள்

சமீபகாலமாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமானப் பதிவுகளை பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் நேற்று “நீங்கள் போக்குவரத்து நெரிசலில் இருக்கும்போது ஆரன் ஒலித்தால் என்ன நேரும்” என்று கேள்வி ஒன்றைப் பதிவிட்டிருந்தது. இதற்கு நெட்சன்ங்கள் தங்கள் பாணியில் சுவாரஸ்மான பதில்களை அளித்திருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் பெரும்பாலானவர்கள், ‘ஆம்புலன்ஸ் ஆரன் என்றால் வழிவிட வேண்டும் என்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எவ்வளவு நெரிசல் என்றாலும் முடிந்தவரை வழிவிட முயற்சி செய்வோம். மற்ற வாகனங்கள் ஆரன் செய்யதால் எரிச்சல்தான் வரும், முட்டாள்கள்தான் சம்பந்தமில்லாமல் ஆரன் அடிப்பார்கள் என்று சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்தார்கள். மேலும், ‘எல்லோரும் அவசரப்பட்டு முன்னே செல்லவேண்டும் என்று போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறது’ என்றார்கள். சிலர் கேள்வியில் இருந்த எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி இது போன்ற கேள்விகள் முட்டாள் தனமானது என்று ரிப்ளை செய்திருந்தனர்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/article-about-the-greater-chennai-traffic-police-viral-tweet