தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுகிறது..வண்ணமயமாக ஜொலிக்கும் சென்னை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த நாள் தமிழ்நாடு நாள் என தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

image

Happy Birthday Tamilnadu… | தமிழ்நாடு தினம் | Tamil People Celebration? *VOX

இன்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கில், நடைபெறும் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார். இவ்விழாவில் கருத்தரங்கம், குறுப்படம் திரையிடம் ஆகியவை நடைபெற உள்ளது. இலக்கிய மாமணி, கபிலர் விருது, உ.வே.சா விருது உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. கீழடி உள்ளிட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

ஜூலை 18 இல்லை! நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள்! தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் அறிக்கை!ஜூலை 18 இல்லை! நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள்! தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு நாள்

1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. கடந்த 2019 முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

ஜூலை 18 தமிழ்நாடு நாள்

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூரும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா 1968-ம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசாணை

இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

வண்ணமயமான சென்னை

அதனையே தமிழகமும் கடைபிடித்து வருகிறது. இருந்த போதும் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் என்பதால் அந்த நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்கிற கருத்தும் தமிழகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் அரசு அலுவலகங்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

English summary
Tamil Nadu day celebration today: (தமிழ்நாடு தினம் இன்று கொண்டாட்டம்)The name of Chennai Province- Madras Province – Madras Province was changed to Tamil Nadu on July 18, 1967 and is celebrated as Tamil Nadu Day by the Government of Tamil Nadu. Government offices in Chennai are lit up with colorful lights as Tamil Nadu Day is celebrated today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-day-is-celebrated-today-chennai-shines-with-colour-466756.html