சென்னை: சட்டவிரோத கருமுட்டை விற்பனை; தாக்கப்பட்ட இளம்பெண்; கணவன், மனைவி கைது – என்ன நடந்தது? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை அருகில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் 22 வயதான ஸ்ருதி, தன் கணவர் விஜய் என்பவருடன் வசித்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமான நிலையில், இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் கணவனுடன் இருந்து வெளியேறி, திருவெற்றியூரில் உள்ள அவரின் தோழி ஐஸ்வர்யா என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார்.

கருமுட்டை விற்பனை

முதலில் ஸ்ருதியிடம் அவரின் தோழி ஐஸ்வர்யா, அவரின் கணவன் சூரஜ் ஆகிய இருவரும் நன்றாகக் கவனித்து, அன்பாகப் பழகி வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், ஸ்ருதிக்கு அவர்கள் இருவரது சுயரூபம் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும், இந்த இளம்பெண்ணின் கருமுட்டையை விற்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக, ஒரு புரோக்கர் மூலம், தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அந்த இளம்பெண்ணை அனுப்பக் கட்டாயப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Source: https://www.vikatan.com/government-and-politics/crime/chennai-girl-ovum-sale-issue-two-people-arrested-by-chennai-police