குணமடைந்து சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்..! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை அன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் 19-ம்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். சமீபத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்தாருடன் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் வெள்ளிக்கிழமை அன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/t-rajender-returns-to-chennai-after-recovering-750873