சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கலிபுல்லா வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மத்திய-மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்க புஞ்சை நிலம் 5 ஏக்கர் வரை வைத்திருப்பவர்களை குறு விவசாயிகள் என்றும், 10 ஏக்கர் வரை வைத்திருப்பவர்களை சிறு விவசாயிகள் என்றும் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தியை விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/farmers-decide-to-lay-siege-to-chennai-chief-secretariat-750345