‘வெல்கம் டு சென்னை’ – செஸ் ஒலிம்பியாட் பாடலை வெளியீட்டார் ஏ.ஆர்.ரஹ்மான் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: “வெலகம் டு சென்னை” என்ற செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7-ம் தேதி இந்த சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த பாடலுக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி வெளியிட்டார்.

இந்நிலையில் “வெலகம் டு சென்னை” என்ற செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை இசையமைப்பபாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று வெளியீட்டார். இந்தப் பாடலில் முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான்களும் இடம் பெற்றுள்ளனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/829420-chennai-chess-olympiad-song-released-by-ar-rahman.html