தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் போட்டுத்தாக்கும் கனமழை.. சென்னைவாசிகள் செம ஹேப்பி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தலைநகர் சென்னையில் பல இடங்களில் இன்றைய தினம் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு மழைக் காலம் தொடங்கியது முதலே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலான பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தலைநகர் சென்னை

இதனிடையே தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. வடசென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஆர்கே நகர், ராயபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல காசிமேடு என நகரின் வடக்கு பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

கனமழை

மேலும் கே.கே.நகரில், அசோக் நகர், கீழ்பாக்கம், மீனம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட நகரின் பல முக்கிய இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி முகப்பேர், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதர பகுதிகள்

தலைநகர் சென்னை மட்டுமின்றி தஞ்சையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நெல் பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், இந்த மழை விவசாயிகளுக்குச் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, திருவண்ணாமலை, ஆரணி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பல 100 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி இருந்தது.

வானிலை மையம்

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “ஜூலை 21இல் திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும் ஜூலை 22இல் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

English summary
Chennai and suburbs receive heavy rain:(தலைநகர் சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை) Chennai rain latest updates in tamil.

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-in-various-parts-of-chennai-in-wee-hours-467319.html