செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஜூலை 28ஆம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் முதல் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழகஅரசு செய்துள்ள நிலையில், வரும் 28ந்தேதி தொடக்க விழா பிரதமர் மோடி முன்னிலையில் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற உள்ளது.

இதையட்டி, நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திய முதல்வர்,  வரும் 28ந்தேதி தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் விவாதித்தவர், அன்றைய தினம்  (28ந்தேதி) 28ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை? விடலாமா என்பது குறித்தும் விவாதித்தார்.

இதையடுத்து இன்று  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் முதல் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Source: https://patrikai.com/tn-govt-declared-local-holiday-on-july-28-for-chennai-chengalpet-tiruvallur-kanchipuram-districts-alone-on-the-eve-of-chess-olympiad-inaugural-ceremony/