சென்னையின் நினைவுகள்! மறக்க முடியாத சென்னை பயணம்! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ந்து வெளியிட்ட வீடியோ! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : செஸ் ஒலிம்பியாட் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்து விட்டு திரும்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சென்னை பயணம் மறக்க முடியாததாக இருந்ததாக வீடியோவினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

image

சென்னையின் நினைவுகள்! மறக்க முடியாத சென்னை பயணம்! பிரதமர் நரேந்திர மோடி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்க விழா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார்.

நேற்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு விமான நிலையம் மட்டும் அவர் சென்ற வழிகளில் உற்சாக வரவேற்வு கொடுக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் நாயகனான குதிரை சின்னம்.. ’தம்பி’ பெயருக்கு அண்ணாவே காரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!செஸ் ஒலிம்பியாட் நாயகனான குதிரை சின்னம்.. ’தம்பி’ பெயருக்கு அண்ணாவே காரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

செஸ் ஒலிம்பியாட்

தொடர்ந்து நேரு உள்விளையாட்டரங்கில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. விழாவின் தொடக்கமாக வண்ண விளக்குகள் ஜொலிக்க பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் களிப்படைய செய்தது. அதன் இடையே, போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளை சேர்ந்த வீரர் – வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்.

பிரதமர் நரேந்திரமோடி

பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமல்லபுரம் கடற்கரை கோவில் போன்ற சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். அடுத்து நடிகர் கமல்ஹாசனின் குரல் பின்னணியில், தமிழரின் பெருமை குறித்த வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்றது. அதை பிரதமர் நரேந்திரமோடி ரசித்து பார்த்தார்.

முதல்வர் ஸ்டாலின்

பின்னர் சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர், இன்று காலை சென்னை அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதங்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ட்விட்டரில் வீடியோ

பின்னர் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி மீண்டும் அகமாதபாத் திரும்பி சென்றார். அவரை தமிழக அரசு சார்பில் முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது சென்னை பயணம் மறக்க முடியாததாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi, who has returned from the Chess Olympiad and Chennai Anna University Convocation, posted a video on Twitter saying that his trip to Chennai was unforgettable.

Source: https://tamil.oneindia.com/news/chennai/pm-narendra-modi-tweeted-thank-you-chennai-for-an-unforgettable-visit-468483.html