சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். பின்னர் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பதாகைகளுடன் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். 

முன்னதாக, சொத்து வரி, மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jul/30/aiadmk-walkout-from-chennai-corporation-meeting-3889534.html