வாங்க… டேஸ்ட் பண்ணுங்க… சென்னை அண்ணா நகரில் உணவுத் திருவிழா! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Food Festival: சென்னை அண்ணாநகரில் உள்ள பொகேன்வில்லா பூங்காவில் தெரு உணவு திருவிழாவை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.

Chennai Food Festival: சென்னை மாநகராட்சி அண்ணாநகரில் உணவு திருவிழா ஜூலை 30இல் (இன்று) நடக்கிறது.

அண்ணாநகரின் பொகேன்வில்லா பூங்காவில் உள்ள தெருவோர வியாபாரிகள் அனைவரும் இத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இன்று செய்து வருகின்றனர்.

ஜூலை 30 ஆம் தேதியான இன்று அண்ணாநகர் பொகேன்வில்லா பூங்கா அருகே சென்னையின் தெரு உணவு வகைகளின் கடை வரிசையாக குறைந்தது 50 ஸ்டால்களுக்கு அமைக்கப்படும்.

இன்று மாலை 5 மணி அளவில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விற்பனையாளர் சென்னையின் தெரு உணவு வகைகளுடன் குறைந்தது 50 ஸ்டால்களை அண்ணாநகரில் அமைக்கவுள்ளார்கள். இரவு 8 மணி வரை நடக்கப்போகும் இந்த உணவு திருவிழா கலாசார நிகழ்வுகளுடன் தெருவோர வியாபாரிகளுக்கு மிகுந்த லாபகரமான நிகழ்வாக அமையவிருக்கிறது.

சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஐந்து ஸ்டால்கள் அமைக்கப்படுகிறது. 25க்கும் மேற்பட்ட தெரு உணவுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த திருவிழாவில் பங்குகொள்ளும் தெருவோர வியாபாரிகளுக்கு 7% வட்டியில் சுமார் ₹10,000 கடனாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிக அளவில் மேற்கொண்டவர்களுக்கு வெகுமதி அளிக்கவுள்ளனர்.

சென்னையில் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து 1.12 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்களை பரிந்துரைத்து, அதில் 40,000 முதல் 50,000 வரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த உணவு திருவிழாவில், நம் கலாச்சாரத்தில் ஒன்றி இருக்கும் பலவகை உணவுகளை உண்டு மகிழலாம். எந்த வித கார்ப்பொரேட் நிறுவனங்களின் பங்கு இல்லாமல் சிறுகடை வியாபாரிகளுக்கு வாய்ப்பு கொடுப்பதால், அண்ணாநகர் குடியிருப்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இந்நிகழ்வு தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்பதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து தெருவோர வியாபாரிகளை தேர்ந்தெடுத்து திருவிழாவின் பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், தெருவோர வியாபாரிகளுக்கு உணவுப் பொருட்களை சுகாதாரமாகத் தயாரித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புச் சான்றிதழைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்டால்களை அமைப்பார்கள். தெரு உணவு நுகர்வோர் மத்தியில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் தெருவோர உணவுத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மேயர் ஆர்.பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-food-festival-on-july-30th-486791/