செம மாஸாக மாறப்போகும் சென்னை.. வரிசை கட்டும் மால்கள்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

உணவு, தியேட்டர், விளையாட்டு, ஷாப்பிங் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அடக்கியதுதான் மால்கள். மால் அல்லது வணிக வளாகங்களுக்கான தேவை இந்தியாவில் இப்போது அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏற்கெனவே நிறைய மால்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதும். பொருட்களை வாங்குவோரை விட நேரம் செலவிடுவதற்காகச் செல்பவர்கள் அதிகம்,

இந்தியாவில் சில்லறை வர்த்தகத் துறை நல்ல வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அதில் மால்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். எனவே இன்னும் அதிகமான மால்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 15 வணிக வளாகங்கள் திறக்கப்படும் என்று ஆய்வு நிறுவனமான அனராக் ரீட்டைல் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் புதிதாக 4 மால்கள் கட்டப்படவிருக்கின்றன. 55 மில்லியன் சதுர அடியில் இந்த மால்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரையில் ஃபோரம் மால், ஸ்கை வாக், ஸ்பென்சர் பிளாசா, பீனிக்ஸ் மால் போன்ற மால்கள் மிகவும் பிரபலம். அந்தவ் வரையில் இன்னும் நான்கு பெரிய மால்கள் வரவிருக்கின்றன. இந்தியாவின் முதல் அடுக்கு, இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் மால்கள் அமைக்கப்படவுள்ளன. இங்குதான் மால்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. 2023ஆம் ஆண்டிலும் 7.25 மில்லியன் சதுர அடி அளவில் வணிக வளாகங்கள் கட்டப்படவுள்ளதாக அனராக் ரீட்டைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செம மாஸாக மாறப் போகும் அவுட்டர் ரிங் ரோடு; CMDA மாஸ்டர் பிளான்!

முன்னதாக 2020ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினை வந்த சமயத்தில் சில்லறை விற்பனை துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் வணிக வளாகங்களிலும் தொழிலும் முடங்கியது. இயல்பு நிலை தற்போது திரும்பியுள்ள நிலையில் மால்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்புகள் மற்றும் தேவை உயர்வுக்கேற்ப மால்களின் எண்ணிக்கை சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/business/business-news/four-new-malls-to-be-built-in-chennai-this-year-15-in-overall-india/articleshow/93266750.cms