சென்னை-மும்பை இடையே ஆகாசா ஏர் விமான சேவை… சிறப்பு நாளில் இருந்து தொடக்கம்! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களுக்கு சொந்தமான ஆகாசா ஏர் பெங்களூரு-கொச்சி மற்றும் பெங்களூரு-மும்பை வழித்தடங்களில் முறையே ஆகஸ்ட் 13 மற்றும் ஆகஸ்ட் 19ஆம் தேதிகளில் சேவையை தொடங்கும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஆகாசா ஏர் மேலும் சில வழிப்பாதைகளில் தனது சேவையை அதிகரிக்க முடிவு செய்த நிலையில் சென்னை-மும்பை உள்பட சில சேவைகளை விரைவில் தொடக்கவுள்ளது.

அந்த வகையில் சென்னை-மும்பை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 15 என்பது அறிஞர் அண்ணா பிறந்த சிறப்பு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட போன்பே QR கோட்கள்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சென்னை-மும்பை வழித்தடத்தில் ஆகாசா ஏர்

சென்னை-மும்பை வழித்தடத்தில் ஆகாசா ஏர்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களுக்கு சொந்தமான ஆகாசா ஏர் செப்டம்பர் 15 முதல் சென்னை-மும்பை வழித்தடத்தில் விமானங்களை இயக்க தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் சென்னை பயணிகள் ஆகாசா விமானத்தில் பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆகாசா ஏர் முதல் சேவை

ஆகாசா ஏர் முதல் சேவை

ஆகாசா ஏர் தனது முதல் சேவையை மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது வணிகரீதியான முதல் விமானத்தை இயக்கவுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்கான முன்பதிவுகளும் தொடங்கிவிட்டது.

அடுத்தடுத்த சேவை

அடுத்தடுத்த சேவை

அதுமட்டுமின்றி ஆகாசா ஏர் விமான நிறுவனம் பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் ஆகஸ்ட் 13 முதல் தனது சேவையை தொடங்கவுள்ளது. அதேபோல் பெங்களூரு-மும்பை வழித்தடத்தில் தனது சேவையை ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

செப்டம்பர் 15 முதல்

செப்டம்பர் 15 முதல்

இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆகாச விமான நிறுவனத்தின் அறிக்கையில் சென்னை மற்றும் மும்பை இடையே விமான சேவை செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படும் என்றும், இந்த சேவை தினசரி விமான சேவையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 2 விமானங்கள்

மாதம் 2 விமானங்கள்

ஆகாசா ஏர் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக இரண்டு விமானங்களை சேர்க்க உள்ளதாகவும், 2023ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தம் 18 விமானங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

72 போயிங் 737 MAX விமானங்கள்

72 போயிங் 737 MAX விமானங்கள்

2023ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் 12 முதல் 14 விமானங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக 72 போயிங் 737 MAX விமானங்கள் ஆர்டர் செய்யப்படும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Chennai-Mumbai route Akasa Air starts from September 15

Chennai-Mumbai route Akasa Air starts from September 15 | சென்னை-மும்பை இடையே ஆகாசா ஏர் விமான சேவை… சிறப்பு நாளில் இருந்து தொடக்கம்!

Story first published: Wednesday, August 3, 2022, 6:46 [IST]

Source: https://tamil.goodreturns.in/news/chennai-mumbai-route-akasa-air-starts-from-september-15-030203.html